குர்ஆன் 11:58 — ஹூ
நம்முடைய தீர்ப்பு வந்தபோது, நாம் ஹூதையும் அவருடன் நம்பிக்கை கொண்டோரையும், நம்மிடமிருந்துள்ள கருணையால் காத்துக் கொண்டோம். ஒரு பயங்கரமான தண்டனையி லிருந்து நாம் அவர்களைக் காப்பாற்றினோம்.
[11:57] “நீங்கள் திரும்பிச் சென்று விட்டால், எதைக் கொண்டு நான் அனுப்பப்பட்டேனோ அதை நான் உங்களிடம் ஒப்படைத்து விட்டேன். என்னுடைய இரட்சகர் உங்களுக்குப் பதிலாக உங்களுடைய இடத்தில் வேறு சமூகத்தாரை அமைத்துவிடுவார்; நீங்கள் அவருக்குச் சிறிதளவும் தீங்கிழைத்து விட முடியாது. என் இரட்சகர் அனைத்து விஷயங் களையும் கட்டுப்பாட்டில் வைத்துள்ளார்.”
[11:59] ஆதுகள் இப்படிப்பட்டவர்களே-அவர்கள் தங்களுடைய இரட்சகரின் வெளிப்பாடுகளை அலட்சியம் செய்தனர், அவருடைய தூதர்களு க்குக் கீழ்ப்படிய மறுத்தனர், மேலும் ஒவ்வொரு பிடிவாதமிக்கக் கொடுங்கோலரின் வழிகளையும் பின்பற்றினர்.