குர்ஆன் 11:6 — ஹூ
கடவுள்-ஆல் வாழ்வாதாரத்திற்கு உத்தர வாதம் அளிக்கப்படாத எந்த ஒரு படைப்பும் பூமியில் இல்லை. இன்னும் அதன் பாதையையும் அதன் இறுதி விதியையும் அவர் அறிந்திருக் கின்றார். அனைத்தும், ஆழ்ந்ததோர் பதிவேட்டில் பதிவாகி உள்ளது.
[11:5] உண்மையில், தங்கள் அழ்மனதின் எண்ணங் களை அவர் அறிந்து கொள்வதிலிருந்தும் அவற்றை தடுத்து விடுவதைப் போல, அவர்கள் மறைத்துக் கொள்கின்றனர். மெய்யாகவே, அவர்கள் தங்களுடைய ஆடைகளால் தங்களை மூடிக்கொள்ளும் போதே, அவர்களுடைய எல்லா இரகசியங்களையும் அறிவிப்புகளையும் அவர் அறிகின்றார். அவர் ஆழ்மனதின் எண்ணங்களை அறிகின்றார்.
[11:7] உங்களை சோதிப்பதற்காகவும், உங்களுக்கிடையில் நன்னெறியான செயல்கள் செய்கின்றவர்களை அடையாளம் காணுவதற்காகவும் அவர்தான் வானங்கள் மற்றும் பூமியை ஆறு நாட்களில் படைத்தவர்-*மேலும் அவருடைய (பூலோக) சாம்ராஜ்யம் முற்றிலும் தண்ணீரால் மூடப் பட்டிருந்தது.**ஆயினும், “இறப்பிற்குப் பின்னர் நீங்கள் மீண்டும் உயிர்ப்பித்தெழுப்பப்படுவீர்கள்” என்று நீங்கள் கூறும்போது, நம்ப மறுப்பவர்கள், “இது தெளிவான சூன்யமாகும்” என்று கூறுவார்கள்.