Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 11:7 — ஹூ

உங்களை சோதிப்பதற்காகவும், உங்களுக்கிடையில் நன்னெறியான செயல்கள் செய்கின்றவர்களை அடையாளம் காணுவதற்காகவும் அவர்தான் வானங்கள் மற்றும் பூமியை ஆறு நாட்களில் படைத்தவர்-*மேலும் அவருடைய (பூலோக) சாம்ராஜ்யம் முற்றிலும் தண்ணீரால் மூடப் பட்டிருந்தது.**ஆயினும், “இறப்பிற்குப் பின்னர் நீங்கள் மீண்டும் உயிர்ப்பித்தெழுப்பப்படுவீர்கள்” என்று நீங்கள் கூறும்போது, நம்ப மறுப்பவர்கள், “இது தெளிவான சூன்யமாகும்” என்று கூறுவார்கள்.

[11:6] கடவுள்-ஆல் வாழ்வாதாரத்திற்கு உத்தர வாதம் அளிக்கப்படாத எந்த ஒரு படைப்பும் பூமியில் இல்லை. இன்னும் அதன் பாதையையும் அதன் இறுதி விதியையும் அவர் அறிந்திருக் கின்றார். அனைத்தும், ஆழ்ந்ததோர் பதிவேட்டில் பதிவாகி உள்ளது.

[11:8] மேலும், அவர்கள் உள்ளாகியிருக்கும் தண்டனையை நாம் தாமதப்படுத்தினால்-ஏனெனில் அதனை ஒரு குறிப்பிட்ட சமூகத்திற்கென நாம் நிறுத்தி வைத்துள்ளோம்-அவர்கள், “அவரைத் தடுத்துக் கொண்டிருப்பது எது?” என்று கூறுகின்றனர். உண்மையில், அது அவர்களிடம் வந்து விட்டால், எதுவும் அதனைத் தடுத்து விடமுடியாது, மேலும் அவர்களுடைய பரிகாசம் மீண்டும், மீண்டும் அவர்களிடமே திரும்பி வரும்.