குர்ஆன் 11:8 — ஹூ
மேலும், அவர்கள் உள்ளாகியிருக்கும் தண்டனையை நாம் தாமதப்படுத்தினால்-ஏனெனில் அதனை ஒரு குறிப்பிட்ட சமூகத்திற்கென நாம் நிறுத்தி வைத்துள்ளோம்-அவர்கள், “அவரைத் தடுத்துக் கொண்டிருப்பது எது?” என்று கூறுகின்றனர். உண்மையில், அது அவர்களிடம் வந்து விட்டால், எதுவும் அதனைத் தடுத்து விடமுடியாது, மேலும் அவர்களுடைய பரிகாசம் மீண்டும், மீண்டும் அவர்களிடமே திரும்பி வரும்.
[11:7] உங்களை சோதிப்பதற்காகவும், உங்களுக்கிடையில் நன்னெறியான செயல்கள் செய்கின்றவர்களை அடையாளம் காணுவதற்காகவும் அவர்தான் வானங்கள் மற்றும் பூமியை ஆறு நாட்களில் படைத்தவர்-*மேலும் அவருடைய (பூலோக) சாம்ராஜ்யம் முற்றிலும் தண்ணீரால் மூடப் பட்டிருந்தது.**ஆயினும், “இறப்பிற்குப் பின்னர் நீங்கள் மீண்டும் உயிர்ப்பித்தெழுப்பப்படுவீர்கள்” என்று நீங்கள் கூறும்போது, நம்ப மறுப்பவர்கள், “இது தெளிவான சூன்யமாகும்” என்று கூறுவார்கள்.
[11:9] எப்பொழுதெல்லாம் நம்மிடமிருந்து, கருணை யைக் கொண்டு மனிதனுக்கு நாம் அருள் பாலித்து, பின்னர் அதனை அகற்றி விடும் போது, அவன் விரக்தியடைந்தவனாகவும், நன்றியற்றவனாகவும் மாறிவிடுகின்றான்.