Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 11:9 — ஹூ

எப்பொழுதெல்லாம் நம்மிடமிருந்து, கருணை யைக் கொண்டு மனிதனுக்கு நாம் அருள் பாலித்து, பின்னர் அதனை அகற்றி விடும் போது, அவன் விரக்தியடைந்தவனாகவும், நன்றியற்றவனாகவும் மாறிவிடுகின்றான்.

[11:8] மேலும், அவர்கள் உள்ளாகியிருக்கும் தண்டனையை நாம் தாமதப்படுத்தினால்-ஏனெனில் அதனை ஒரு குறிப்பிட்ட சமூகத்திற்கென நாம் நிறுத்தி வைத்துள்ளோம்-அவர்கள், “அவரைத் தடுத்துக் கொண்டிருப்பது எது?” என்று கூறுகின்றனர். உண்மையில், அது அவர்களிடம் வந்து விட்டால், எதுவும் அதனைத் தடுத்து விடமுடியாது, மேலும் அவர்களுடைய பரிகாசம் மீண்டும், மீண்டும் அவர்களிடமே திரும்பி வரும்.

[11:10] துன்பம் அவனைத் துன்புறுத்திய பின்னர், அவனுக்கு நாம் அருள்பாலிக்கும் போதெல்லாம், “எல்லாத் துன்பங்களும் என்னை விட்டு அகன்று விட்டன” என்று அவன் கூறுகின்றான்;” அவன் உணர்ச்சி வசப்பட்டவனாகவும், கர்வம் கொண்ட வனாகவும் ஆகிவிடுகின்றான்.