குர்ஆன் 11:74 — ஹூ
ஆப்ரஹாமின் பயம் தணிந்து, மேலும் நற்செய்தி அவரிடம் கொடுக்கப்பட்டபோது, அவர் லோத்துடைய சமூகத்தாரின் சார்பாக நம்முடன் வாதம் செய்ய முன் வந்தார்.
[11:73] அவர்கள், “ கடவுள்-க்கு ஆச்சரியமானதாக இதை நீர் காண்கின்றீரா? புனித ஆலயத்தில் வசிப்போரே, கடவுள் தனது கருணையையும், அருட்கொடைகளையும் உங்கள் மீது வழங்கி யுள்ளார். அவர் புகழுக்குரியவர், மகிமை மிக்கவர்” என்று கூறினார்கள்.
[11:75] உண்மையில், ஆப்ரஹாம் இரக்கமுடையவர், மிகுந்த கனிவுடையவர், மேலும் கீழ்படிந்தவர் ஆக இருந்தார்.