குர்ஆன் 11:77 — ஹூ
நம்முடைய தூதர்கள் லோத்திடம் சென்ற போது, அவர்கள் தவறாக நடத்தப்பட்டனர், மேலும் அவர்களுடைய வருகையால் அவர் சங்கடத் திற்குள்ளானார். அவர், “ இது ஒரு கஷ்டமான நாளாகும்”என்று கூறினார்.
[11:76] “ஆப்ரஹாமே, இதிலிருந்து விலகிக் கொள்ளும். உமது இரட்சகரின் தீர்ப்பு வழங்கப்பட்டுவிட்டது; அவர்கள் தவிர்த்து விட முடியாத தண்டனைக்கு உள்ளாகி விட்டனர்.”
[11:78] அவருடைய சமூகத்தார் விரைந்து வந்தனர்; அவர்கள் தங்களுடைய பாவச் செயல்களுக்குப் பழகியே வளர்ந்திருந்தனர். அவர், “என் சமூகத் தாரே, இதற்கு பதில் என்னுடைய மகள்களை நீங்கள் எடுத்துக் கொண்டால், அது உங்களுக்கு மிகத் தூய்மையானதாக இருக்கும். நீங்கள் கடவுள்-இடம் பயபக்தியுடன் இருக்க வேண்டும்; என்னுடைய விருந்தினர்களோடு என்னைச் சங்கடப்படுத்தாதீர்கள். உங்களுக்கிடையில் நியாயமான மனிதர் ஒருவர் கூட இல்லையா?” என்று கூறினார்.