குர்ஆன் 11:91 — ஹூ
அவர்கள், “ ஷுஐபே, நீர் எங்களிடம் கூறும் விஷயங்களில் பலவற்றை நாங்கள் புரிந்து கொள்ளவில்லை, மேலும் எங்களுக்கிடையில் செல்வாக்கற்றவராகவே உம்மை நாங்கள் காண்கின்றோம். உம்முடைய குலத்தார் மட்டும் இல்லையென்றால், உம்மை நாங்கள் கல்லாலடி த்துக் கொன்றிருப்போம். உமக்கு எங்களிடம் எந்த மதிப்பும் இல்லை”என்று கூறினார்கள்.
[11:90] “நீங்கள் உங்கள் இரட்சகரிடம் பாவமன்னிப் பிற்காக இறைஞ்சிப் பிரார்த்திக்க வேண்டும், பின்னர் அவரிடம் வருந்தித்திருந்தவேண்டும். என்னுடைய இரட்சகர் மிக்க கருணையாளர், கனிவானவர்.”
[11:92] அவர் கூறினார், “ என்னுடைய சமூகத்தாரே, என்னுடைய குலத்தார் கடவுள்-ஐ விட அதிக மதிப்பிற்குத் தகுதி அடைந்து விட்டனரா? இதனால் தான் அவரைக் குறித்து நீங்கள் கவனமில்லாமல் இருக்கின்றீர்களா? என்னுடைய இரட்சகர் நீங்கள் செய்யும் அனைத்தையும் முற்றிலும் அறிந்திருக்கின்றார்.