குர்ஆன் 11:92 — ஹூ
அவர் கூறினார், “ என்னுடைய சமூகத்தாரே, என்னுடைய குலத்தார் கடவுள்-ஐ விட அதிக மதிப்பிற்குத் தகுதி அடைந்து விட்டனரா? இதனால் தான் அவரைக் குறித்து நீங்கள் கவனமில்லாமல் இருக்கின்றீர்களா? என்னுடைய இரட்சகர் நீங்கள் செய்யும் அனைத்தையும் முற்றிலும் அறிந்திருக்கின்றார்.
[11:91] அவர்கள், “ ஷுஐபே, நீர் எங்களிடம் கூறும் விஷயங்களில் பலவற்றை நாங்கள் புரிந்து கொள்ளவில்லை, மேலும் எங்களுக்கிடையில் செல்வாக்கற்றவராகவே உம்மை நாங்கள் காண்கின்றோம். உம்முடைய குலத்தார் மட்டும் இல்லையென்றால், உம்மை நாங்கள் கல்லாலடி த்துக் கொன்றிருப்போம். உமக்கு எங்களிடம் எந்த மதிப்பும் இல்லை”என்று கூறினார்கள்.
[11:93] “என்னுடைய சமூகத்தாரே, நீங்கள் விரும்பு வதைத் தொடர்ந்து செய்து கொண்டிருங்கள், அவ்வாறே நானும் செய்வேன். நம்மில் இழிவு மிக்கதோர் தண்டனைக்கு உள்ளாகப் போவது யார் என்பதை நீங்கள் நிச்சயம் கண்டு கொள்வீர்கள்; பொய்யுரைப்பவர் யார் என்பதையும் நீங்கள் கண்டு கொள்வீர்கள். எதிர்பார்ப்புடன் காத்துக் கொண்டு இருங்கள், மேலும் நானும் உங்களுடன் சேர்ந்து எதிர்பார்ப்போடு காத்துக் கொண்டிருப்பேன்.”