Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 11:93 — ஹூ

“என்னுடைய சமூகத்தாரே, நீங்கள் விரும்பு வதைத் தொடர்ந்து செய்து கொண்டிருங்கள், அவ்வாறே நானும் செய்வேன். நம்மில் இழிவு மிக்கதோர் தண்டனைக்கு உள்ளாகப் போவது யார் என்பதை நீங்கள் நிச்சயம் கண்டு கொள்வீர்கள்; பொய்யுரைப்பவர் யார் என்பதையும் நீங்கள் கண்டு கொள்வீர்கள். எதிர்பார்ப்புடன் காத்துக் கொண்டு இருங்கள், மேலும் நானும் உங்களுடன் சேர்ந்து எதிர்பார்ப்போடு காத்துக் கொண்டிருப்பேன்.”

[11:92] அவர் கூறினார், “ என்னுடைய சமூகத்தாரே, என்னுடைய குலத்தார் கடவுள்-ஐ விட அதிக மதிப்பிற்குத் தகுதி அடைந்து விட்டனரா? இதனால் தான் அவரைக் குறித்து நீங்கள் கவனமில்லாமல் இருக்கின்றீர்களா? என்னுடைய இரட்சகர் நீங்கள் செய்யும் அனைத்தையும் முற்றிலும் அறிந்திருக்கின்றார்.

[11:94] நம்முடைய தீர்ப்பு வந்தபோது, நாம் ஷுஐபையும் அவருடன் நம்பிக்கை கொண்டோரையும், நம்மிடமிருந்துள்ள கருணையால் காத்துக் கொண்டோம். தீயவர்களைப் பொறுத்தவரை, அவர்கள் ஒரு பேரழிவால் தாக்கப்பட்டார்கள், அது அவர்களை இறந்தவர்களாக அவர் களுடைய வீடுகளில் விட்டுவிட்டது.