குர்ஆன் 11:94 — ஹூ
நம்முடைய தீர்ப்பு வந்தபோது, நாம் ஷுஐபையும் அவருடன் நம்பிக்கை கொண்டோரையும், நம்மிடமிருந்துள்ள கருணையால் காத்துக் கொண்டோம். தீயவர்களைப் பொறுத்தவரை, அவர்கள் ஒரு பேரழிவால் தாக்கப்பட்டார்கள், அது அவர்களை இறந்தவர்களாக அவர் களுடைய வீடுகளில் விட்டுவிட்டது.
[11:93] “என்னுடைய சமூகத்தாரே, நீங்கள் விரும்பு வதைத் தொடர்ந்து செய்து கொண்டிருங்கள், அவ்வாறே நானும் செய்வேன். நம்மில் இழிவு மிக்கதோர் தண்டனைக்கு உள்ளாகப் போவது யார் என்பதை நீங்கள் நிச்சயம் கண்டு கொள்வீர்கள்; பொய்யுரைப்பவர் யார் என்பதையும் நீங்கள் கண்டு கொள்வீர்கள். எதிர்பார்ப்புடன் காத்துக் கொண்டு இருங்கள், மேலும் நானும் உங்களுடன் சேர்ந்து எதிர்பார்ப்போடு காத்துக் கொண்டிருப்பேன்.”
[11:95] அது அவர்கள் ஒருபோதும் உயிர் வாழ்ந்தி ராதவர்கள் போலாக்கி விட்டது. இவ்விதமாகவே, அதற்கு முன்னர் தமூது அழிந்து போனது போல், மித்யனும் அழிந்து போனது.