குர்ஆன் 12:15 — ஜோஸஃப்
அவர்கள் அவருடன் வெளியில் சென்று, மேலும் அவரைக் கிணற்றின் ஆழத்தில் எறிந்து விடுவ தென்று ஏகமனதாக முடிவு செய்த போது, நாம் அவருக்கு: “என்றாவது ஒருநாள், அவர்கள் எதுவும் அறியாமல் இருக்கும்போது, இது அனைத்தையும் பற்றி நீர் அவர்களிடம் கூறுவீர்” என்று உள்ளுணர்வளித்தோம்.
[12:14] அவர்கள், “உண்மையில், நாங்கள் இத்தனை பேர் சுற்றிலும் இருக்கும் போதும், ஓநாய் அவரை விழுங்கி விடுமானால், அப்போது மெய் யாகவே நாங்கள் நஷ்டமடைந்தவர்களாகத் தான் இருப்போம்” என்று கூறினார்கள்.
[12:16] அவர்கள் மாலையில், தேம்பி அழுதவர்களாக, தங்கள் தந்தையிடம் திரும்பி வந்தனர்.