குர்ஆன் 12:3 — ஜோஸஃப்
இந்தக் குர்ஆனுடைய வெளிப்பாட்டின் மூலம் மிகத் துல்லியமான சரித்திரத்தை நாம் உமக்கு எடுத்துரைக்கின்றோம். இதற்கு முன்னர், நீர் முற்றிலும் அறியாதவராக இருந்தீர்.
[12:2] நீங்கள் புரிந்து கொள்வதற்காக,* இதனை ஓர் அரபிமொழியிலானதொரு குர்ஆனாக நாம் வெளிப்படுத்தியுள்ளோம்.
[12:4] ஜோஸஃப் தன் தந்தையிடம், “என் தந்தையே, பதினோரு கிரகங்களையும் சூரியனையும், சந்திரனையும் நான் கண்டேன்; என் முன்னர் அவை சிரம் பணிய நான் கண்டேன்” என்று கூறியதை நினைவு கூருங்கள்.