Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 12:32 — ஜோஸஃப்

அவள், “நான் காதல் வசப்பட்டு விட்டதாக என் மீது பழி கூறினீர்களே, அந்த ஒருவர் இவர் தான். நான் உண்மையில் அவரை வசீகரிக்கவே முயன்றேன். அவருக்கு நான் கட்டளையிடு வதை அவர் செய்யவில்லையென்றால், நிச்சய மாக அவர் சிறைக்குச் செல்வார், மேலும் தரம் தாழ்த்தப்பட்டவராகி விடுவார்” என்று கூறினாள்.

[12:31] அவர்களுடைய அரட்டையைப் பற்றி அவள் கேள்விப்பட்டபோது, அவள் அவர்களை வரவழைத்தாள், வசதியான ஓர் இடத்தை அவர்களுக்காகத் தயார் செய்தாள், மேலும் அவர்கள் ஒவ்வொருவரிடமும் ஒரு கத்தியைக் கொடுத்தாள். பின்னர் அவள் அவரிடம் “அவர்களுடைய அறைக்குள் நுழைவீராக” என்று கூறினாள். அவர்கள் அவரைக் கண்ட போது, அவர்கள் தங்கள் கரங்களை வெட்டிக் கொள்ளும் அளவிற்கு, அவரைக் கண்டு மிகவும் வியப்பிற்குள்ளாயினர்*. அவர்கள், “கடவுள் துதிப்பிற்குரியவர், இவர் ஒரு மனிதரே இல்லை; இவர் ஒரு கண்ணியமிக்க வானவராவார்” என்று கூறினார்கள்.

[12:33] அவர், “என் இரட்சகரே, அவர்களுக்கு நான் இணங்குவதை விட அந்தச் சிறையே மேலான தாகும். அவர்களுடைய சூழ்ச்சியை என்னை விட்டு நீர் திருப்பிவிட்டாலன்றி, அவர்கள் மேல் நான் ஆசை கொள்ளவும், அறிவில்லாதவர் களைப் போல் நடந்து கொள்ளவும் கூடும்” என்று கூறினார்.