Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 12:33 — ஜோஸஃப்

அவர், “என் இரட்சகரே, அவர்களுக்கு நான் இணங்குவதை விட அந்தச் சிறையே மேலான தாகும். அவர்களுடைய சூழ்ச்சியை என்னை விட்டு நீர் திருப்பிவிட்டாலன்றி, அவர்கள் மேல் நான் ஆசை கொள்ளவும், அறிவில்லாதவர் களைப் போல் நடந்து கொள்ளவும் கூடும்” என்று கூறினார்.

[12:32] அவள், “நான் காதல் வசப்பட்டு விட்டதாக என் மீது பழி கூறினீர்களே, அந்த ஒருவர் இவர் தான். நான் உண்மையில் அவரை வசீகரிக்கவே முயன்றேன். அவருக்கு நான் கட்டளையிடு வதை அவர் செய்யவில்லையென்றால், நிச்சய மாக அவர் சிறைக்குச் செல்வார், மேலும் தரம் தாழ்த்தப்பட்டவராகி விடுவார்” என்று கூறினாள்.

[12:34] அவருடைய இரட்சகர் அவருடைய பிரார்த் தனைக்குப் பதிலளித்தார், மேலும் அவர் களுடைய சூழ்ச்சியை அவரை விட்டுத் திருப்பி விட்டார். அவர்தான் செவியேற்பவர், எல்லாம் அறிந்தவர்.