குர்ஆன் 12:54 — ஜோஸஃப்
மன்னர், “அவரை என்னிடம் கொண்டு வாருங் கள், இவ்வாறாக எனக்குப் பணி செய்வதற்காக அவரை நான் அமர்த்திக் கொள்ள இயலும்,” என்று கூறினார். அவருடன் அவர் உரையாடிய போது, அவர், “இன்றைய தினம், நம்மிடம் உமக்கு முக்கியத்துவமிக்கதொரு அந்தஸ்து உள்ளது” என்று கூறினார்.
[12:53] “நான், என்னை குற்றமற்றவள் என்று உரிமை கோரவில்லை. என்னுடைய இரட்சகரிடமிருந்து கருணையை அடைந்தவர்களுக்கு தவிர, மன இச்சையானது தீய ஒழுக்கத்தை ஆதரிக்கும் ஒன்றாகும். என் இரட்சகர் மன்னிப்பவர், மிக்க கருணையாளர்.”
[12:55] அவர், “என்னைக் கருவூல அதிகாரியாக ஆக்குவீராக, ஏனெனில் இத்துறையில் நான் அனுபவமிக்கவனாகவும் அறிவைப் பெற்றவனா கவும் இருக்கின்றேன்” என்று கூறினார்.