குர்ஆன் 12:55 — ஜோஸஃப்
அவர், “என்னைக் கருவூல அதிகாரியாக ஆக்குவீராக, ஏனெனில் இத்துறையில் நான் அனுபவமிக்கவனாகவும் அறிவைப் பெற்றவனா கவும் இருக்கின்றேன்” என்று கூறினார்.
[12:54] மன்னர், “அவரை என்னிடம் கொண்டு வாருங் கள், இவ்வாறாக எனக்குப் பணி செய்வதற்காக அவரை நான் அமர்த்திக் கொள்ள இயலும்,” என்று கூறினார். அவருடன் அவர் உரையாடிய போது, அவர், “இன்றைய தினம், நம்மிடம் உமக்கு முக்கியத்துவமிக்கதொரு அந்தஸ்து உள்ளது” என்று கூறினார்.
[12:56] இவ்விதமாக அவர் விரும்பியபடி ஆளும் வண்ணம், பூமியில் நாம் ஜோஸஃபை நிலைநிறுத்தினோம். நாம் நாடுவோர் மீது நமது கருணையை நாம் பொழிகின்றோம், மேலும் நன்னெறியாளர்களுக்குப் பிரதிபலன் வழங்க ஒருபோதும் நாம் தவறுவதில்லை.