குர்ஆன் 12:56 — ஜோஸஃப்
இவ்விதமாக அவர் விரும்பியபடி ஆளும் வண்ணம், பூமியில் நாம் ஜோஸஃபை நிலைநிறுத்தினோம். நாம் நாடுவோர் மீது நமது கருணையை நாம் பொழிகின்றோம், மேலும் நன்னெறியாளர்களுக்குப் பிரதிபலன் வழங்க ஒருபோதும் நாம் தவறுவதில்லை.
[12:55] அவர், “என்னைக் கருவூல அதிகாரியாக ஆக்குவீராக, ஏனெனில் இத்துறையில் நான் அனுபவமிக்கவனாகவும் அறிவைப் பெற்றவனா கவும் இருக்கின்றேன்” என்று கூறினார்.
[12:57] கூடுதலாக, நம்பிக்கை கொண்டு நன்னெறியான தொரு வாழ்வு நடத்துவோருக்குரிய மறுவுலகின் வெகுமதியோ, இன்னும் மிக மேலானதாகும்.