குர்ஆன் 12:62 — ஜோஸஃப்
அவர் பின்னர் தன் உதவியாளர்களுக்கு உத்தர விட்டார் : “அவர்களுடைய சரக்குகளை அவர் களுடைய பைகளில் மீண்டும் வைத்து விடுங்கள். அவர்கள் தங்கள் குடும்பத்தாரிடம் திரும்பிச் சென்ற பின்னர், அவற்றைக் காணும்போது, அவர்கள் விரைவில் திரும்பி வரக்கூடும்.”
[12:61] அவர்கள், “அவரைப் பற்றி அவருடைய தந்தையிடம் நாங்கள் பேச்சுவார்த்தை நடத்துவோம். நிச்சயமாக நாங்கள் இதனைச் செய்வோம்” என்று கூறினார்கள்.
[12:63] அவர்களுடைய தந்தையிடம் அவர்கள் திரும்பிச் சென்றபோது, அவர்கள், “எங்கள் தந்தையே, எங்கள் சகோதரனை எங்களுடன் நீர் அனுப்பினாலன்றி, இதற்குப் பிறகு எந்த உணவுப் பொருட்களையும் நம்மால் பெற முடியாது. நாங்கள் அவரை நன்கு கவனித்துக் கொள்வோம்” என்று கூறினார்கள்.