Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 12:63 — ஜோஸஃப்

அவர்களுடைய தந்தையிடம் அவர்கள் திரும்பிச் சென்றபோது, அவர்கள், “எங்கள் தந்தையே, எங்கள் சகோதரனை எங்களுடன் நீர் அனுப்பினாலன்றி, இதற்குப் பிறகு எந்த உணவுப் பொருட்களையும் நம்மால் பெற முடியாது. நாங்கள் அவரை நன்கு கவனித்துக் கொள்வோம்” என்று கூறினார்கள்.

[12:62] அவர் பின்னர் தன் உதவியாளர்களுக்கு உத்தர விட்டார் : “அவர்களுடைய சரக்குகளை அவர் களுடைய பைகளில் மீண்டும் வைத்து விடுங்கள். அவர்கள் தங்கள் குடும்பத்தாரிடம் திரும்பிச் சென்ற பின்னர், அவற்றைக் காணும்போது, அவர்கள் விரைவில் திரும்பி வரக்கூடும்.”

[12:64] அவர், “ இதற்கு முன்னர் இவருடைய சகோதரரை நான் உங்களிடம் நம்பி ஒப்படைத்ததைப் போல், இவரையும் நான் உங்களை நம்பி ஒப்படைக்க வேண்டுமா? கடவுள் தான் மிகச் சிறந்த பாதுகாவலர், மேலும், கருணையுடையவர்கள் அனைவரிலும், அவர்தான் மிக்க கருணையாளர்” என்று கூறினார்.