Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 12:64 — ஜோஸஃப்

அவர், “ இதற்கு முன்னர் இவருடைய சகோதரரை நான் உங்களிடம் நம்பி ஒப்படைத்ததைப் போல், இவரையும் நான் உங்களை நம்பி ஒப்படைக்க வேண்டுமா? கடவுள் தான் மிகச் சிறந்த பாதுகாவலர், மேலும், கருணையுடையவர்கள் அனைவரிலும், அவர்தான் மிக்க கருணையாளர்” என்று கூறினார்.

[12:63] அவர்களுடைய தந்தையிடம் அவர்கள் திரும்பிச் சென்றபோது, அவர்கள், “எங்கள் தந்தையே, எங்கள் சகோதரனை எங்களுடன் நீர் அனுப்பினாலன்றி, இதற்குப் பிறகு எந்த உணவுப் பொருட்களையும் நம்மால் பெற முடியாது. நாங்கள் அவரை நன்கு கவனித்துக் கொள்வோம்” என்று கூறினார்கள்.

[12:65] அவர்கள் தங்களுடைய பைகளைத் திறந்தபோது, அவர்களுடைய சரக்குகள் அவர்களிடம் திரும்பத் தரப்பட்டுள்ளதை அவர்கள் கண்டார் கள். அவர்கள், “ எங்கள் தந்தையே, இதற்கு மேல் நாம் என்ன கேட்க இயலும்? இதோ நமது சரக்குகள் நம்மிடம் திரும்பத் தரப்பட்டுள்ளன. இதன் மூலம் நாம் நமது குடும்பத்திற்கு வழங்கவும், எங்கள் சகோதரரைப் பாதுகாத்துக் கொள்ளவும் , இன்னும் ஒரு ஒட்டகத்தின் சுமையளவு பெற்றுக் கொள்ளவும் இயலும். நிச்சயமாக இது இலாபகரமானதொரு வியாபாரமே ஆகும்” என்று கூறினார்கள்.