குர்ஆன் 12:65 — ஜோஸஃப்
அவர்கள் தங்களுடைய பைகளைத் திறந்தபோது, அவர்களுடைய சரக்குகள் அவர்களிடம் திரும்பத் தரப்பட்டுள்ளதை அவர்கள் கண்டார் கள். அவர்கள், “ எங்கள் தந்தையே, இதற்கு மேல் நாம் என்ன கேட்க இயலும்? இதோ நமது சரக்குகள் நம்மிடம் திரும்பத் தரப்பட்டுள்ளன. இதன் மூலம் நாம் நமது குடும்பத்திற்கு வழங்கவும், எங்கள் சகோதரரைப் பாதுகாத்துக் கொள்ளவும் , இன்னும் ஒரு ஒட்டகத்தின் சுமையளவு பெற்றுக் கொள்ளவும் இயலும். நிச்சயமாக இது இலாபகரமானதொரு வியாபாரமே ஆகும்” என்று கூறினார்கள்.
[12:64] அவர், “ இதற்கு முன்னர் இவருடைய சகோதரரை நான் உங்களிடம் நம்பி ஒப்படைத்ததைப் போல், இவரையும் நான் உங்களை நம்பி ஒப்படைக்க வேண்டுமா? கடவுள் தான் மிகச் சிறந்த பாதுகாவலர், மேலும், கருணையுடையவர்கள் அனைவரிலும், அவர்தான் மிக்க கருணையாளர்” என்று கூறினார்.
[12:66] அவர், “நீங்கள் முற்றிலும் தோற்கடிக்கப் பட்டாலன்றி, அவரை நீங்கள் திரும்பக் கொண்டு வருவீர்கள் என்று, கடவுள் முன் முறைப்படியானதொரு சத்தியத்தை நீங்கள் எனக்குத் தந்தாலே தவிர, நான் அவரை உங்களுடன் அனுப்ப மாட்டேன்” என்று கூறினார். அவர்களுடைய முறைப்படியான சத்தியத்தை அவர்கள் அவருக்கு தந்த போது, அவர், “நாம் கூறும் ஒவ்வொன்றிற்கும் கடவுள் சாட்சியாக உள்ளார்” என்று கூறினார்.