குர்ஆன் 12:66 — ஜோஸஃப்
அவர், “நீங்கள் முற்றிலும் தோற்கடிக்கப் பட்டாலன்றி, அவரை நீங்கள் திரும்பக் கொண்டு வருவீர்கள் என்று, கடவுள் முன் முறைப்படியானதொரு சத்தியத்தை நீங்கள் எனக்குத் தந்தாலே தவிர, நான் அவரை உங்களுடன் அனுப்ப மாட்டேன்” என்று கூறினார். அவர்களுடைய முறைப்படியான சத்தியத்தை அவர்கள் அவருக்கு தந்த போது, அவர், “நாம் கூறும் ஒவ்வொன்றிற்கும் கடவுள் சாட்சியாக உள்ளார்” என்று கூறினார்.
[12:65] அவர்கள் தங்களுடைய பைகளைத் திறந்தபோது, அவர்களுடைய சரக்குகள் அவர்களிடம் திரும்பத் தரப்பட்டுள்ளதை அவர்கள் கண்டார் கள். அவர்கள், “ எங்கள் தந்தையே, இதற்கு மேல் நாம் என்ன கேட்க இயலும்? இதோ நமது சரக்குகள் நம்மிடம் திரும்பத் தரப்பட்டுள்ளன. இதன் மூலம் நாம் நமது குடும்பத்திற்கு வழங்கவும், எங்கள் சகோதரரைப் பாதுகாத்துக் கொள்ளவும் , இன்னும் ஒரு ஒட்டகத்தின் சுமையளவு பெற்றுக் கொள்ளவும் இயலும். நிச்சயமாக இது இலாபகரமானதொரு வியாபாரமே ஆகும்” என்று கூறினார்கள்.
[12:67] மேலும் அவர், “ என் மகன்களே, ஒரு வாசல் வழியாக நுழையாதீர்கள்; வெவ்வேறு வாசல்களின் மூலமாக நுழையுங்கள். எப்படியிருப்பினும், கடவுள்-ஆல் முன்னரே தீர்மானிக்கப்பட்ட எந்த விஷயத்தி லிருந்தும் நான் உங்களைக் காப்பாற்றி விட முடியாது. தீர்ப்புகள் அனைத்தும் கடவுள்-க்கு உரியது. அவரிடம் நான் பொறுப்பை ஒப்படைக் கின்றேன், மேலும் பொறுப்பை ஒப்படைப்பவர்கள் அனைவரும் அவர் மீதே பொறுப்பை ஒப்படைக்க வேண்டும்” என்று கூறினார்.