Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 12:67 — ஜோஸஃப்

மேலும் அவர், “ என் மகன்களே, ஒரு வாசல் வழியாக நுழையாதீர்கள்; வெவ்வேறு வாசல்களின் மூலமாக நுழையுங்கள். எப்படியிருப்பினும், கடவுள்-ஆல் முன்னரே தீர்மானிக்கப்பட்ட எந்த விஷயத்தி லிருந்தும் நான் உங்களைக் காப்பாற்றி விட முடியாது. தீர்ப்புகள் அனைத்தும் கடவுள்-க்கு உரியது. அவரிடம் நான் பொறுப்பை ஒப்படைக் கின்றேன், மேலும் பொறுப்பை ஒப்படைப்பவர்கள் அனைவரும் அவர் மீதே பொறுப்பை ஒப்படைக்க வேண்டும்” என்று கூறினார்.

[12:66] அவர், “நீங்கள் முற்றிலும் தோற்கடிக்கப் பட்டாலன்றி, அவரை நீங்கள் திரும்பக் கொண்டு வருவீர்கள் என்று, கடவுள் முன் முறைப்படியானதொரு சத்தியத்தை நீங்கள் எனக்குத் தந்தாலே தவிர, நான் அவரை உங்களுடன் அனுப்ப மாட்டேன்” என்று கூறினார். அவர்களுடைய முறைப்படியான சத்தியத்தை அவர்கள் அவருக்கு தந்த போது, அவர், “நாம் கூறும் ஒவ்வொன்றிற்கும் கடவுள் சாட்சியாக உள்ளார்” என்று கூறினார்.

[12:68] அவர்கள் (ஜோஸஃபிடம்) சென்ற போது, தங்கள் தந்தையின் அறிவுரைக்கு ஏற்பவே அவர்கள் நுழைந்தனர். கடவுள்-ஆல் விதிக்கப்பட்ட எந்த விஷயத்தையும் இது மாற்றிவிட முடிய வில்லை என்ற போதிலும், இப்படிச் செய்யும்படி அவர்களிடம் கூறியதற்கு, ஜேக்கபிற்கு ஒரு பிரத்தியேகக் காரணம் இருந்தது. ஏனெனில் நாம் அவருக்குக் கற்பித் திருந்த உறுதியான அறிவை அவர் பெற்றிருந்தார், ஆனால் மனிதர்களில் பெரும் பாலோர் அறிய மாட்டார்கள்.