Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 12:68 — ஜோஸஃப்

அவர்கள் (ஜோஸஃபிடம்) சென்ற போது, தங்கள் தந்தையின் அறிவுரைக்கு ஏற்பவே அவர்கள் நுழைந்தனர். கடவுள்-ஆல் விதிக்கப்பட்ட எந்த விஷயத்தையும் இது மாற்றிவிட முடிய வில்லை என்ற போதிலும், இப்படிச் செய்யும்படி அவர்களிடம் கூறியதற்கு, ஜேக்கபிற்கு ஒரு பிரத்தியேகக் காரணம் இருந்தது. ஏனெனில் நாம் அவருக்குக் கற்பித் திருந்த உறுதியான அறிவை அவர் பெற்றிருந்தார், ஆனால் மனிதர்களில் பெரும் பாலோர் அறிய மாட்டார்கள்.

[12:67] மேலும் அவர், “ என் மகன்களே, ஒரு வாசல் வழியாக நுழையாதீர்கள்; வெவ்வேறு வாசல்களின் மூலமாக நுழையுங்கள். எப்படியிருப்பினும், கடவுள்-ஆல் முன்னரே தீர்மானிக்கப்பட்ட எந்த விஷயத்தி லிருந்தும் நான் உங்களைக் காப்பாற்றி விட முடியாது. தீர்ப்புகள் அனைத்தும் கடவுள்-க்கு உரியது. அவரிடம் நான் பொறுப்பை ஒப்படைக் கின்றேன், மேலும் பொறுப்பை ஒப்படைப்பவர்கள் அனைவரும் அவர் மீதே பொறுப்பை ஒப்படைக்க வேண்டும்” என்று கூறினார்.

[12:69] ஜோஸஃபின் இடத்திற்குள் அவர்கள் நுழைந்த போது, அவர் தன் சகோதரரை தனக்கு அருகில் கொண்டு வந்து , “ நான் உமது சகோதரன்; அவர் களுடைய செயல்களால் கவலைக்குள்ளாகாதீர்” என்று கூறினார்.