Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 12:69 — ஜோஸஃப்

ஜோஸஃபின் இடத்திற்குள் அவர்கள் நுழைந்த போது, அவர் தன் சகோதரரை தனக்கு அருகில் கொண்டு வந்து , “ நான் உமது சகோதரன்; அவர் களுடைய செயல்களால் கவலைக்குள்ளாகாதீர்” என்று கூறினார்.

[12:68] அவர்கள் (ஜோஸஃபிடம்) சென்ற போது, தங்கள் தந்தையின் அறிவுரைக்கு ஏற்பவே அவர்கள் நுழைந்தனர். கடவுள்-ஆல் விதிக்கப்பட்ட எந்த விஷயத்தையும் இது மாற்றிவிட முடிய வில்லை என்ற போதிலும், இப்படிச் செய்யும்படி அவர்களிடம் கூறியதற்கு, ஜேக்கபிற்கு ஒரு பிரத்தியேகக் காரணம் இருந்தது. ஏனெனில் நாம் அவருக்குக் கற்பித் திருந்த உறுதியான அறிவை அவர் பெற்றிருந்தார், ஆனால் மனிதர்களில் பெரும் பாலோர் அறிய மாட்டார்கள்.

[12:70] அவர்களுடைய உணவுப்பொருட்களை அவர் களுக்கு அவர் விநியோகித்த போது, அருந்தும் குவளையை தன் சகோதரரின் பையில் அவர் வைத்து விட்டார், பின்னர் அறிவிப்பாளர் ஒருவர்: “இந்த வணிக வண்டியின் சொந்தக்காரர்கள் திருடர்கள்” என்று அறிவித்தார்