குர்ஆன் 12:75 — ஜோஸஃப்
அவர்கள், “தண்டனையானது, அது அவனது பையில் காணப்பட்டால், அத்திருடன் உங்களு குரியவன் என்பதாகும். இவ்விதமாகவே நாங்கள் குற்றவாளிகளைத் தண்டிப்போம்” என்று கூறினார்கள்.
[12:74] அவர்கள், “ நீங்கள் பொய்யர்களாக இருந்தால், திருடனுக்குரிய தண்டனை என்ன?” என்று கூறினார்கள்.
[12:76] அவர் பின்னர், அவருடைய சகோதரரின் பெட்டிக்குச் செல்லும் முன்னர், அவர்களுடைய பெட்டியிலிருந்து சோதனையைத் துவங்கினார், மேலும் அதனை அவருடைய சகோதரரின் பெட்டியிலிருந்து வெளியே எடுத்தார். இவ் விதமாக ஜோஸஃபிற்கு அத்திட்டத்தை நாம் முடித்துக் கொடுத்தோம்; மன்னரின் சட்டத்தை அவர் செயல்படுத்தியிருந்தால் அவருடைய சகோதரரை அவரால் தக்க வைத்துக் கொண்டிருக்க முடியாது. ஆனால் அதுதான் கடவுள்-ன் நாட்டமாக இருந்தது. நாம் தேர்ந்தெடுப்போரை உயர்ந்த அந்தஸ்துகளுக்கு நாம் உயர்த்துகின்றோம். அறிவைப் பெற்றவர் ஒவ்வொருவருக்கும் மேலாக, இன்னும் அதிக அறிவைப் பெற்ற ஒருவர் இருக்கின்றார்.