குர்ஆன் 12:91 — ஜோஸஃப்
அவர்கள், “கடவுள் மீது ஆணையாக, கடவுள் எங்களுக்கு மேலாக உண்மையாகவே உம்மைத் தேர்ந்தெடுத்துள்ளார். நிச்சயமாக நாங்கள் தவறானவர்களாகவே இருந்தோம்” என்று கூறினார்கள்.
[12:90] அவர்கள், “ நீர் தான் ஜோஸஃப்பாக இருக்க வேண்டும்“ என்று கூறினார்கள். அவர், “ நான் தான் ஜோஸஃப், மேலும் இதோ எனது சகோ தரன். கடவுள் எங்களுக்கு அருள்புரிந்து விட்டார். அது ஏனெனில், ஒருவர் நன்னெறி யானதொரு வாழ்வு நடத்தி, மேலும் உறுதியாய் விடாமுயற்சியுடன் இருப்பாராயின், நன்னெறி யாளர்களுக்கு வெகுமதியளிக்க கடவுள் ஒருபோதும் தவறுவதில்லை,” என்று கூறினார்.
[12:92] அவர் கூறினார், “இன்றைய தினம் உங்கள் மீது எந்தக் குற்றச்சாட்டும் இல்லை. கடவுள் உங்களை மன்னிப்பாராக. கருணையுடையவர்கள் அனை வரிலும், அவரே மிக்க கருணையாளர்.