குர்ஆன் 12:93 — ஜோஸஃப்
“என்னுடைய இந்தச் சட்டையை எடுத்துக் கொள்ளுங்கள்; என் தந்தையின் முகத்தில் நீங்கள் இதனை எறியும்போது, அவருடைய பார்வை திரும்பவும் மீளும். உங்கள் குடும்பம் முழுவதையும் அழைத்துக் கொண்டு என்னிடம் திரும்பி வாருங்கள்*”
[12:92] அவர் கூறினார், “இன்றைய தினம் உங்கள் மீது எந்தக் குற்றச்சாட்டும் இல்லை. கடவுள் உங்களை மன்னிப்பாராக. கருணையுடையவர்கள் அனை வரிலும், அவரே மிக்க கருணையாளர்.
[12:94] பிரயாணிகளின் கூட்டம் வந்து சேர்வதற்கும் முன்பாகவே, அவர்களுடைய தந்தை, “ஜோஸஃ பின் வாடையை என்னால் உணர முடிகின்றது. எவரேனும் எனக்குத் தெளிவு படுத்துவீர்களா?” என்று கூறினார்.