குர்ஆன் 12:99 — ஜோஸஃப்
ஜோஸஃபின் இல்லத்திற்குள் அவர்கள் நுழைந்த போது, “எகிப்திற்கு வரவேற்கின்றேன். கடவுள் நாடினால், நீங்கள் இங்கே பாதுகாப்புடன் இருப்பீர்கள்” என்று கூறியவராக அவர் தன் பெற்றோரைத் தழுவிக் கொண்டார்.
[12:98] `அவர், “உங்களை மன்னிக்கும்படி என் இரட்சகரி டம் நான் இறைஞ்சிப் பிரார்த்திப்பேன்; அவர் மன்னிப்பவர், மிக்க கருணையாளர்” என்று கூறினார்.
[12:100] அவர் தன் பெற்றோரை அரியாசனத்தின் மீது உயர்த்தினார். அவர்கள் அவர் முன் சிரம் பணிந்து விழுந்தனர். அவர், “ என் தந்தையே, இது என் பழைய கனவின் நிறைவேற்றம் ஆகும். என் இரட்சகர் அதனை நனவாக்கி விட்டார். அவர் எனக்கு அருள்புரிந்து விட்டார், சிறையிலிருந்து என்னை விடுதலை செய்தார், மேலும் எனக்கும் என் சகோதரர்களுக்கும் இடையில் சாத்தான் பிளவை ஏற்படுத்தி விட்டதன் பின்னர், பாலை வனத்தில் இருந்து உங்களைக் கொண்டு வந்தார். தான் நாடுவோர் மீது என் இரட்சகர் மிகுந்த கனிவுடையவராக இருக்கின்றார். அவர் அறிந்தவர், ஞானம் மிக்கவர்” என்று கூறினார்.