Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 12:100 — ஜோஸஃப்

وَرَفَعَ أَبَوَيهِ عَلَى العَرشِ وَخَرّوا لَهُ سُجَّدًا ۖ وَقالَ يٰأَبَتِ هٰذا تَأويلُ رُءيٰىَ مِن قَبلُ قَد جَعَلَها رَبّى حَقًّا ۖ وَقَد أَحسَنَ بى إِذ أَخرَجَنى مِنَ السِّجنِ وَجاءَ بِكُم مِنَ البَدوِ مِن بَعدِ أَن نَزَغَ الشَّيطٰنُ بَينى وَبَينَ إِخوَتى ۚ إِنَّ رَبّى لَطيفٌ لِما يَشاءُ ۚ إِنَّهُ هُوَ العَليمُ الحَكيمُ

அவர் தன் பெற்றோரை அரியாசனத்தின் மீது உயர்த்தினார். அவர்கள் அவர் முன் சிரம் பணிந்து விழுந்தனர். அவர், “ என் தந்தையே, இது என் பழைய கனவின் நிறைவேற்றம் ஆகும். என் இரட்சகர் அதனை நனவாக்கி விட்டார். அவர் எனக்கு அருள்புரிந்து விட்டார், சிறையிலிருந்து என்னை விடுதலை செய்தார், மேலும் எனக்கும் என் சகோதரர்களுக்கும் இடையில் சாத்தான் பிளவை ஏற்படுத்தி விட்டதன் பின்னர், பாலை வனத்தில் இருந்து உங்களைக் கொண்டு வந்தார். தான் நாடுவோர் மீது என் இரட்சகர் மிகுந்த கனிவுடையவராக இருக்கின்றார். அவர் அறிந்தவர், ஞானம் மிக்கவர்” என்று கூறினார்.

[12:99] ஜோஸஃபின் இல்லத்திற்குள் அவர்கள் நுழைந்த போது, “எகிப்திற்கு வரவேற்கின்றேன். கடவுள் நாடினால், நீங்கள் இங்கே பாதுகாப்புடன் இருப்பீர்கள்” என்று கூறியவராக அவர் தன் பெற்றோரைத் தழுவிக் கொண்டார்.

[12:101] “என் இரட்சகரே, எனக்கு நீர் அரசாட்சியைத் தந்திருக்கின்றீர், மேலும் கனவுகளின் விளக்கத் தை எனக்குக் கற்றுத் தந்திருக்கின்றீர். வானங் கள் மற்றும் பூமியைத் துவக்கியவரே; இவ்வுலகிலும், மறுவுலகிலும் நீரே என் இரட்சகரும், எஜமானருமாவீர். அடிபணிந்த ஒருவராக என்னை மரணிக்கச் செய்வீராக, மேலும் நன்னெறியாளர்களுடன் என்னைக் கணக்கிடு வீராக.”