குர்ஆன் 12:101 — ஜோஸஃப்
“என் இரட்சகரே, எனக்கு நீர் அரசாட்சியைத் தந்திருக்கின்றீர், மேலும் கனவுகளின் விளக்கத் தை எனக்குக் கற்றுத் தந்திருக்கின்றீர். வானங் கள் மற்றும் பூமியைத் துவக்கியவரே; இவ்வுலகிலும், மறுவுலகிலும் நீரே என் இரட்சகரும், எஜமானருமாவீர். அடிபணிந்த ஒருவராக என்னை மரணிக்கச் செய்வீராக, மேலும் நன்னெறியாளர்களுடன் என்னைக் கணக்கிடு வீராக.”
[12:100] அவர் தன் பெற்றோரை அரியாசனத்தின் மீது உயர்த்தினார். அவர்கள் அவர் முன் சிரம் பணிந்து விழுந்தனர். அவர், “ என் தந்தையே, இது என் பழைய கனவின் நிறைவேற்றம் ஆகும். என் இரட்சகர் அதனை நனவாக்கி விட்டார். அவர் எனக்கு அருள்புரிந்து விட்டார், சிறையிலிருந்து என்னை விடுதலை செய்தார், மேலும் எனக்கும் என் சகோதரர்களுக்கும் இடையில் சாத்தான் பிளவை ஏற்படுத்தி விட்டதன் பின்னர், பாலை வனத்தில் இருந்து உங்களைக் கொண்டு வந்தார். தான் நாடுவோர் மீது என் இரட்சகர் மிகுந்த கனிவுடையவராக இருக்கின்றார். அவர் அறிந்தவர், ஞானம் மிக்கவர்” என்று கூறினார்.
[12:102] இது கடந்த காலத்திலிருந்து நாம் உமக்கு வெளிப்படுத்தும் செய்தியாகும். அவர்கள் ஒன்று கூடி சதியாலோசனை செய்தவர்களாக (ஜோஸஃபைக் கிணற்றில் எறிந்து விடுவதென்ற) அவர்களுடைய ஒருமித்த முடிவை அவர்கள் செய்த போது, நீர் அவர்களுடன் இருக்கவில்லை.