Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 13:18 — இடியோசை

தங்கள் இரட்சகருக்கு மறுமொழி அளிப்பவர்கள் நல்ல வெகுமதிகளுக்குத் தகுதியுடையவர் களாகின்றனர். அவருக்கு மறுமொழி அளிக்கத் தவறி விட்டவர்களைப் பொறுத்தவரை, பூமியில் உள்ள அனைத்தையும் அவர்கள் சொந்தமாகக் கொண்டிருந்தாலும் - அதுபோல் இருமடங் கானாலும்-அவர்கள் உடனடியாக அதனை ஈட்டுத் தொகையாகத் தந்து விடுவார்கள். அவர்கள் மோசமான கேள்விக் கணக்கிற்கு உள்ளாகி விட்டனர், மேலும் அவர்களுடைய இறுதித் தங்குமிடம் நரகமாகும்; எத்தகையதொரு துக்ககரமான விதி.

[13:17] அவர் விண்ணிலிருந்து தண்ணீரை இறக்கி அனுப்பு கின்றார், அதன்மூலம் பள்ளத்தாக்குகள் நிரம்பி வழிகின்றன, பின்னர் அந்த நீர்வீழ்ச்சி அபரிமிதமான நுரையை உருவாக்குகின்றது. அதுபோலவே, அவர்களுடைய ஆபரணங் களுக்காகவோ அல்லது சாதனங்களுக் காகவோ உலோகங்களைச் சுத்தம் செய்ய அவர்கள் நெருப்பைப் பயன்படுத்தும் போதும், நுரை உருவாகின்றது. கடவுள் இவ்விதமாக சத்தியத்திற்கும் அசத்தியத்திற்கும் உவமானங் களை எடுத்துரைக்கின்றார். அந்த நுரையைப் பொறுத்தவரை, அது வீணாகிப் போகின்றது, அதே சமயம் மனிதர்களுக்குப் பயன் தருவதோ மண்ணிற்கு நெருக்கமாகத் தங்கி விடுகின்றது. கடவுள் இவ்விதமாக உவமானங்களை எடுத்துரைக்கின்றார்.

[13:19] உமக்குக் கொடுக்கப்பட்ட உம்முடைய இரட்ச கரின் வெளிப்பாடுகளைச் சத்தியம் என அடை யாளம் கண்டு [13:19] கொண்ட ஒருவர், குருடராக இருக்கும் ஒருவருக்குச் சமமாவாரா? அறிவுடையோர் மட்டுமே கவனத்தில் எடுத்துக் கொள்வார்கள்.