குர்ஆன் 13:19 — இடியோசை
உமக்குக் கொடுக்கப்பட்ட உம்முடைய இரட்ச கரின் வெளிப்பாடுகளைச் சத்தியம் என அடை யாளம் கண்டு [13:19] கொண்ட ஒருவர், குருடராக இருக்கும் ஒருவருக்குச் சமமாவாரா? அறிவுடையோர் மட்டுமே கவனத்தில் எடுத்துக் கொள்வார்கள்.
[13:18] தங்கள் இரட்சகருக்கு மறுமொழி அளிப்பவர்கள் நல்ல வெகுமதிகளுக்குத் தகுதியுடையவர் களாகின்றனர். அவருக்கு மறுமொழி அளிக்கத் தவறி விட்டவர்களைப் பொறுத்தவரை, பூமியில் உள்ள அனைத்தையும் அவர்கள் சொந்தமாகக் கொண்டிருந்தாலும் - அதுபோல் இருமடங் கானாலும்-அவர்கள் உடனடியாக அதனை ஈட்டுத் தொகையாகத் தந்து விடுவார்கள். அவர்கள் மோசமான கேள்விக் கணக்கிற்கு உள்ளாகி விட்டனர், மேலும் அவர்களுடைய இறுதித் தங்குமிடம் நரகமாகும்; எத்தகையதொரு துக்ககரமான விதி.
[13:20] அவர்கள் கடவுள்-இடம் செய்த தங்கள் வாக்குறுதியை நிறைவேற்றுபவர்கள், மேலும் உடன்படிக்கைகளை மீறாதவர்கள்.