குர்ஆன் 13:26 — இடியோசை
கடவுள் தான், அவர் நாடுகின்றோருக்கு வாழ்வாதாரத்தை அதிகரிக்கவோ அல்லது அதனை நிறுத்தி வைத்துக் கொள்ளவோ செய்கின்றார். இந்த வாழ்வில் மூழ்கியவர் களாக அவர்கள் ஆகிவிட்டனர், மேலும் இந்த வாழ்வு, மறுவுலகுடன் ஒப்பிடப்படும்போது, ஒன்றுமேயில்லை.
[13:25] கடவுள்-ன் உடன்படிக்கையைக் காப்பதாக வாக்குறுதி செய்து விட்டுப் பின்னர் அதனை மீறுபவர்கள், மேலும் கடவுள் சேர்த்து வைக்க வேண்டும் என்று கட்டளையிட்டவற்றைத் துண்டிப்பவர்கள், மேலும் தீமையைச் செய் பவர்கள், அவர்களைப் பொறுத்தவரை, அவர்கள் தண்டித்தலுக்கு உள்ளாகி விட்டார்கள்; அவர்கள் மோசமான விதிக்கு உள்ளாகிவிட்டார்கள்.
[13:27] நம்ப மறுப்போர், “அவருடைய இரட்சகரிட மிருந்து அவருக்கு ஓர் அற்புதம் மட்டும் இறங்கி வந்தால் (நாங்கள் நம்பிக்கை கொள்வோம்)” என்று கூறுவார்கள். “கடவுள், தான் நாடுவோரை வழிகேட்டில் அனுப்பி விடுகின் றார், மேலும் கீழ்ப்படிவோருக்கு மட்டுமே அவர் தன்பால் வழிகாட்டுகின்றார்” என்று கூறுவீராக.