Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 13:27 — இடியோசை

நம்ப மறுப்போர், “அவருடைய இரட்சகரிட மிருந்து அவருக்கு ஓர் அற்புதம் மட்டும் இறங்கி வந்தால் (நாங்கள் நம்பிக்கை கொள்வோம்)” என்று கூறுவார்கள். “கடவுள், தான் நாடுவோரை வழிகேட்டில் அனுப்பி விடுகின் றார், மேலும் கீழ்ப்படிவோருக்கு மட்டுமே அவர் தன்பால் வழிகாட்டுகின்றார்” என்று கூறுவீராக.

[13:26] கடவுள் தான், அவர் நாடுகின்றோருக்கு வாழ்வாதாரத்தை அதிகரிக்கவோ அல்லது அதனை நிறுத்தி வைத்துக் கொள்ளவோ செய்கின்றார். இந்த வாழ்வில் மூழ்கியவர் களாக அவர்கள் ஆகிவிட்டனர், மேலும் இந்த வாழ்வு, மறுவுலகுடன் ஒப்பிடப்படும்போது, ஒன்றுமேயில்லை.

[13:28] அவர்கள் கடவுள்-ஐ நினைவு கூர்வதில் ஆனந்தம் அடைகின்ற இதயங்கள் கொண்டவர்கள். நிச்சயமாக, கடவுள்-ஐ நினைவு கூர்வதன் மூலமே, இதயங்கள் ஆனந்தமடைகின்றன.