Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 14:43 — ஆப்ரஹாம்

(சமாதிகளில் இருந்து வெளியே) அவர்கள் விரைந்து வரும்போது, அவர்களுடைய முகங் கள் மேல்நோக்கியவாறு இருக்கும், அவர்களு டைய விழிகள் இமைக்கவும் செய்யாது, மேலும் அவர்களுடைய மனங்கள் திடுக்குற்றிருக்கும்.

[14:42] வரம்பு மீறுபவர்கள் செய்பவற்றைக் கடவுள் அறியாமல் இருக்கின்றார் என்று ஒருபோதும் நீர் எண்ணிவிட வேண்டாம். கண்கள் திகிலில் நிலைகுத்தி நின்று விடும் அந்நாள் வரை அவர்களுக்கு அவகாசம் மட்டுமே அவர் அளிக்கின்றார்.

[14:44] அவர்களுக்கு தண்டனை வரும் அந்நாளைக் குறித்து மனிதர்களை நீர் எச்சரிக்க வேண்டும். வரம்பு மீறியவர்கள், “எங்கள் இரட்சகரே, மற்றுமொரு அவகாசத்தை எங்களுக்குத் தருவீராக. அப்போது நாங்கள் உமது அழைப்பிற்கு பதில் அளிப்போம், மேலும் தூதர்களைப் பின்பற்றுவோம்” என்று கூறுவார் கள். உங்களுக்கு முடிவே இல்லை என்று கடந்த காலத்தில் நீங்கள் சத்தியம் செய்து கொண்டிருக்கவில்லையா?