குர்ஆன் 14:44 — ஆப்ரஹாம்
அவர்களுக்கு தண்டனை வரும் அந்நாளைக் குறித்து மனிதர்களை நீர் எச்சரிக்க வேண்டும். வரம்பு மீறியவர்கள், “எங்கள் இரட்சகரே, மற்றுமொரு அவகாசத்தை எங்களுக்குத் தருவீராக. அப்போது நாங்கள் உமது அழைப்பிற்கு பதில் அளிப்போம், மேலும் தூதர்களைப் பின்பற்றுவோம்” என்று கூறுவார் கள். உங்களுக்கு முடிவே இல்லை என்று கடந்த காலத்தில் நீங்கள் சத்தியம் செய்து கொண்டிருக்கவில்லையா?
[14:43] (சமாதிகளில் இருந்து வெளியே) அவர்கள் விரைந்து வரும்போது, அவர்களுடைய முகங் கள் மேல்நோக்கியவாறு இருக்கும், அவர்களு டைய விழிகள் இமைக்கவும் செய்யாது, மேலும் அவர்களுடைய மனங்கள் திடுக்குற்றிருக்கும்.
[14:45] உங்களுக்கு முன்னர் இருந்த தங்களுடைய ஆன்மாக்களுக்குத் தீங்கிழைத்துக் கொண்ட வர்களுடைய வீடுகளில் நீங்கள் வசித்தீர்கள், மேலும் அவர்களை நாம் என்ன செய்தோம் என்பதை நீங்கள் தெளிவாகப் பார்த்தீர்கள். ஏராளமான முன்னுதாரணங்களை உங்களுக் காக நாம் அமைத்துள்ளோம்.