குர்ஆன் 14:47 — ஆப்ரஹாம்
கடவுள் தன் தூதர்களுக்கு அளித்த தனது வாக்குறுதியை எப்பொழுதேனும் முறித்து விடுவார் என்று எண்ணாதீர்கள். கடவுள் சர்வ வல்லமையுடையவர், பழி தீர்ப்பவர்.
[14:46] அவர்கள் தங்களுடைய திட்டங்களைத் திட்ட மிட்டனர், மேலும் கடவுள் அவர்களுடைய திட்டங்களை முற்றிலும் அறிந்திருக்கின்றார். உண்மையில், அவர்களுடைய திட்டங்கள் மலை களைத் துடைத்து எடுத்துவிடும் அளவிற்கு இருந்தன.
[14:48] புதியதொரு பூமியால் இந்தப் பூமியும், மற்றும் அத்துடன் வானங்களும் மாற்றியமைக்கப்படும் அந்நாள் வரும். மேலும், ஒருவரானவரும், மேலான அதிகாரம் கொண்டவருமான கடவுள்-க்கு முன்னால் அவர்கள் ஒவ்வொரு வரும் கொண்டு வரப்படுவார்கள்.