குர்ஆன் 15:22 — அல்-ஹிஜ்ர் பள்ளத்தாக்கு
மேலும் மகரந்தச் சேர்க்கை செய்பவைகளாகக் காற்றுகளை நாம் அனுப்புகின்றோம், மேலும் நீங்கள் அருந்துவதற்காக விண்ணிலிருந்து தண்ணீரைக் கீழிறங்கி வரச் செய்கின்றோம். இல்லையெனில், சுவைக்கத்தக்கதாக அதனை வைத்திருக்க உங்களால் இயலாது.
[15:21] அதில் உள்ள எந்த ஒன்றும், எல்லையற்ற அளவில், நமக்குச் சொந்தமாக இல்லாமல் இல்லை. ஆனால் நாம் அவற்றை மிகச் சரியான அளவில் கீழே இறக்கி அனுப்புகின்றோம்.
[15:23] நாம் தான் வாழ்வையும், மரணத்தையும் கட்டுப் படுத்துகின்றோம், மேலும் நாமே இறுதியான வாரிசுகள் ஆவோம்.