குர்ஆன் 15:52 — அல்-ஹிஜ்ர் பள்ளத்தாக்கு
அவருடைய இல்லத்திற்குள் அவர்கள் நுழைந்த போது, அவர்கள், “அமைதி” என்று கூறி னார்கள், அவர், “நாங்கள் உங்களைப் பற்றி மிகவும் அஞ்சியவர்களாக இருக்கின்றோம்” என்று கூறினார்.
[15:51] ஆப்ரஹாமின் விருந்தினர்களைப் பற்றி அவர்களுக்கு அறிவிப்பீராக.
[15:53] அவர்கள் , “அஞ்சாதீர். நாங்கள் உமக்கு ஒரு நற்செய்தியை வைத்திருக்கின்றோம்: அறி வூட்டப்பெற்ற ஒரு மகன்“ என்று கூறினார்கள்.