குர்ஆன் 16:102 — தேனீ
“நம்பிக்கை கொண்டோரை மறுவுறுதிப்படுத்து வதற்காகவும், மேலும் அடிபணிந்தோருக்கு ஒரு வழிகாட்டியையும் மேலும் நற்செய்தியையும் வழங்குவதற்காகவும், உமது இரட்சகரிடமிருந்து சத்தியத்துடன், பரிசுத்த ஆவி இதனைக் கீழே கொண்டு வந்தார்” என்று கூறுவீராக.
[16:101] ஒரு வெளிப்பாட்டை மற்றொன்றின் இடத்தில் நாம் மாற்றியமைக்கும் போதும் மேலும், கடவுள் அவர் வெளிப்படுத்துபவற்றை முற்றிலும் அறிந்தே இருக்கும் போதும், அவர்கள், “நீரே இதனை உருவாக்கிக் கொண்டீர்!” என்று கூறுகின்றார்கள். உண்மையில், அவர்களில் பெரும்பாலோர் அறிய மாட்டார்கள்.
[16:103] “ஒரு மனிதர் தான் அவருக்குக் கற்றுக் கொடுக் கின்றார்!” என்று அவர்கள் கூறுகின்றதை நாம் முற்றிலும் அறிவோம். அவர்கள் மறைமுகமாக குறிப்பிடும் மூலாதாரத்தின் மொழி அரபி அல்ல, மேலும் இது குறைபாடற்ற ஓர் அரபி மொழியாகும்.