Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 16:11 — தேனீ

அதனைக் கொண்டு, அவர் உங்களுக்காகப் பயிர்கள், ஒலிவம், பேரீச்சை, திராட்சை மற்றும் அனைத்துக் கனிவர்க்கங்களையும் விளை விக்கின்றார். சிந்திக்கும் மக்களுக்கு இது (போதிய) சான்றாகும்.

[16:10] உங்கள் பானத்திற்காகவும், உங்களுடைய பயன்பாட்டிற்கென மரங்களை வளர்ப்பதற்காகவும் அவர் விண்ணிலிருந்து தண்ணீரைக் கீழே இறக்கி அனுப்புகின்றார்.

[16:12] மேலும் இரவையும், பகலையும் அவ்வாறே சூரியனையும் சந்திரனையும் உங்களுக்குப் பணி செய்வதற்காக அவர் ஆக்கினார். இன்னும் நட்சத்திரங்களும் அவருடைய கட்டளையால் பணிக்கப்பட்டுள்ளன. புரிந்து கொள்ளும் மக்களுக்கு இவை (போதிய) சான்றுகளாகும்.