Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 16:13 — தேனீ

மேலும் உங்களுக்காகப் பூமியின் மீது பல்வேறு நிறங்கள் கொண்ட பொருட்களையும் (அவர் படைத்தார்). கவனத்தில் கொள்ளும் மக்களுக்கு இது ஒரு (போதிய) சான்றாகும்.

[16:12] மேலும் இரவையும், பகலையும் அவ்வாறே சூரியனையும் சந்திரனையும் உங்களுக்குப் பணி செய்வதற்காக அவர் ஆக்கினார். இன்னும் நட்சத்திரங்களும் அவருடைய கட்டளையால் பணிக்கப்பட்டுள்ளன. புரிந்து கொள்ளும் மக்களுக்கு இவை (போதிய) சான்றுகளாகும்.

[16:14] மேலும் கடலை உங்களுக்குப் பணி செய்வதற்காக அவர் ஆக்கினார்; அதிலிருந்து மிருதுவான இறைச்சியை நீங்கள் உண்ணு கின்றீர்கள், மேலும் நீங்கள் அணிந்து கொள்ளும் ஆபரணங்களை அதிலிருந்து எடுத்துக் கொள்கின்றீர்கள். மேலும் அவருடைய அருட்கொடைகளை நீங்கள் தேடும் பொழுது, நீங்கள் நன்றியுடையவர்களாக இருக்கும் பொருட்டு, உங்களுடைய வணிகப்பலன் களுக்காகக் கப்பல்கள் அதனைச் சுற்றி வருவதை நீங்கள் காண்கின்றீர்கள்.