குர்ஆன் 16:14 — தேனீ
மேலும் கடலை உங்களுக்குப் பணி செய்வதற்காக அவர் ஆக்கினார்; அதிலிருந்து மிருதுவான இறைச்சியை நீங்கள் உண்ணு கின்றீர்கள், மேலும் நீங்கள் அணிந்து கொள்ளும் ஆபரணங்களை அதிலிருந்து எடுத்துக் கொள்கின்றீர்கள். மேலும் அவருடைய அருட்கொடைகளை நீங்கள் தேடும் பொழுது, நீங்கள் நன்றியுடையவர்களாக இருக்கும் பொருட்டு, உங்களுடைய வணிகப்பலன் களுக்காகக் கப்பல்கள் அதனைச் சுற்றி வருவதை நீங்கள் காண்கின்றீர்கள்.
[16:13] மேலும் உங்களுக்காகப் பூமியின் மீது பல்வேறு நிறங்கள் கொண்ட பொருட்களையும் (அவர் படைத்தார்). கவனத்தில் கொள்ளும் மக்களுக்கு இது ஒரு (போதிய) சான்றாகும்.
[16:15] மேலும் உங்களுடன் சேர்ந்து உருண்டு விழுந்து விடாதிருக்கும் பொருட்டு, நிலைப்படுத்து பவைகளை (மலைகளை)யும் அவ்வாறே நீங்கள் வழிகாட்டப்படும் பொருட்டு, ஆறுகளையும், சாலைகளையும் அவர் பூமியின் மீது அமைத்தார்.