குர்ஆன் 16:33 — தேனீ
வானவர்கள் அவர்களிடம் வருவதற்காகவோ அல்லது உமது இரட்சகரின் தீர்ப்பு நிகழ்ந்தேறும் வரையோ அவர்கள் காத்துக் கொண்டிருக் கின்றனரா? அவர்களுக்கு முன்னர் இருந்தவர்களும் இதையே தான் செய்தார்கள். கடவுள் அவர்களுக்கு அநீதமிழைக்கவில்லை; அவர்கள்தான் தங்கள் சொந்த ஆன்மாக் களுக்கே அநீதமிழைத்துக் கொண்டனர்.
[16:32] வானவர்கள், “உங்கள் மீது அமைதி நிலவுவதாக. உங்களுடைய காரியங்களுக்கு வெகுமதியாக* (இப்போது) சுவனத்தில் நுழையுங்கள்” என்று கூறியவாறு, நன்னெறி யோடிருக்கும் ஒரு நிலையில் அவர்களுடைய வாழ்வுகளை முடிவிற்குக் கொண்டு வருவார்கள்.
[16:34] அவர்களுடைய பாவமான காரியங்களின் பின்விளைவுகளுக்கு அவர்கள் உள்ளானார் கள், மேலும் அவர்கள் பரிகசித்த அதே விஷயங்கள் திரும்பி வந்து அவர்களை மீண்டும் மீண்டும் அவதிக்குள்ளாக்கியது.