குர்ஆன் 16:44 — தேனீ
சான்றுகளையும் மற்றும் வேதங்களையும் அவர்களுக்கு நாம் வழங்கினோம். மேலும் மக்களுக்கு இறக்கியனுப்பப்பட்ட ஒவ்வொன் றையும், அவர்களுக்கு நீர் பிரகடனம் செய்வதற்காக இத்தூதுச் செய்தியை உமக்கு நாம் இறக்கி அனுப்பினோம், ஒரு வேளை அவர்கள் சிந்தித்துப் பார்க்கக் கூடும்.
[16:43] உமக்கு முன்னர் நம்மால் உள்ளுணர்வூட்டப் பட்டவர்களாக ஆண்களை அன்றி நாம் அனுப்பவில்லை. உங்களுக்குத் தெரிய வில்லை என்றால், வேதத்தை அறிந்தவர் களிடம் கேட்டுக் கொள்ளுங்கள்.
[16:45] தீய சூழ்ச்சிகளைத் திட்டமிடுபவர்கள், அவர்களை பூமி விழுங்கும்படிக் கடவுள் செய்ய மாட்டார் என்றோ அல்லது அவர்கள் சற்றும் எதிர்பாராதிருக்கும் போது தண்டனை அவர் களிடம் வந்துவிடாதென்றோ உத்தரவாதம் கொண்டிருக்கின்றனரா?