குர்ஆன் 16:60 — தேனீ
மறுவுலகின் மீது நம்பிக்கை கொள்ளாதவர்கள் மிக மோசமான உதாரணங்களை அமைக் கின்றனர்,அதே சமயம் மிக மேலான உதார ணங்கள் கடவுள்-க்கு உரியவை. அவர் சர்வ வல்லமையுடையவர், ஞானம் மிக்கவர்.
[16:59] அவனுக்குக் கொடுக்கப்பட்ட கெட்ட செய்தியால் வெட்கப்பட்டவனாக, மக்களிட மிருந்து அவன் ஒளிந்து கொள்கின்றான். அக்குழந்தையை அவன் மனமில்லாமல் வைத்துக் கொள்வதா, அல்லது புழுதியில் அவளைப் புதைத்து விடுவதா, என்று கூட அவன் யோசிக்கின்றான். அவர்களுடைய கருத்து உண்மையில் துக்ககரமானது.
[16:61] மனிதர்களை, அவர்களுடைய வரம்பு மீறல்களுக்காகக் கடவுள் தண்டிப்பாரே யானால், பூமியின் மேல் உள்ள ஒவ்வொரு உயிரினத்தையும் அவர் அழித்திருப்பார். ஆனால் குறிப்பிட்டதொரு, முன்னரே தீர் மானிக்கப்பட்ட நேரத்திற்கென அவர்களுக்கு அவர் அவகாசம் அளிக்கின்றார். அவர்களுடைய தவணை முடிந்து விட்டால், அதனை ஒரு மணிநேரம் கூட தாமதப்படுத்தவோ அன்றி முற்படுத்தவோ அவர்களால் இயலாது.