குர்ஆன் 16:87 — தேனீ
அந்நாளில் அவர்கள் கடவுள்-க்கு முற்றிலும் அடிபணிவார்கள், மேலும் அவர்கள் கண்டு பிடித்த இணைத்தெய்வங்கள் அவர்களைக் கைவிட்டு விடும்.
[16:86] மேலும் இணைத்தெய்வ வழிபாடு செய்தவர்கள் அவர்களுடைய இணைத் தெய்வங்களைக் காணும் போது, அவர்கள், “எங்கள் இரட்சகரே, உம்முடன் நாங்கள் வழிபட்ட இணைத் தெய்வங் கள் இவர்கள் தான்” என்று கூறுவார்கள். பின்னர் அவர்களை எதிர்கொண்டு அந்த இணைத்தெய்வங்கள், “நீங்கள் பொய்யர் களாக இருக்கின்றீர்கள்” என்று கூறும்.
[16:88] நம்பிக்கை கொள்ள மறுத்து, கடவுள்-ன் பாதையை விட்டும் விரட்டுபவர்களுக்கு, அவர்களுடைய வரம்பு மீறல்களின் காரணத்தால், தண்டனையைக் கூட்டுவதன் மூலம் அவர்களுடைய தண்டனையை நாம் மேலும் அதிகரிப்போம்.