குர்ஆன் 17:104 — இஸ்ரவேலின் சந்ததியினர்
மேலும் அதன் பின்னர் இஸ்ரவேலின் சந்ததியினரிடம் நாம், “சென்று இந்த நாட்டில் வாழுங்கள். இறுதி முன்னறிவிப்பு நிகழ்ந்தேறும் போது, உங்கள் அனைவரையும் ஒரே கூட்டமாக நாம் ஒன்று கூட்டுவோம்” என்று கூறினோம்.
[17:103] அவன் அவர்களை நாட்டை விட்டு வெளியே துரத்தியவாறு, அவன் அவர்களை பின்தொடர்ந்த போது, அவன் பக்கம் இருந்தவர்களுடன் சேர்த்து அவனையும், அவர்கள் அனைவரையும் நாம் மூழ்கடித்தோம்.
[17:105] சத்தியம் நிறைந்ததாக, இதனை நாம் இறக்கினோம், மேலும் சத்தியத்துடனே இது இறங்கி வந்தது. நற்செய்தியைக் கொண்டு செல்லும் ஒருவராகவும், அத்துடன் எச்சரிப்பவராகவுமே அன்றி உம்மை நாம் அனுப்பவில்லை.